அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல பா.ஜனதா சதி செய்கிறது - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல பா.ஜனதா சதி செய்கிறது - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து பா.ஜனதா பொய்யான தகவல்களை வெளியிடுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து டெல்லி கவர்னரும், பா.ஜனதாவும் பொய்யான தகவல்களை வெளியிடுவது சந்தேகத்தை அதிகரிக்கிறது. கவர்னரும், பா.ஜனதாவும் கெஜ்ரிவால் உயிருடன் விளையாடுகிறார்கள். திகார் சிறை நிர்வாகம், கெஜ்ரிவாலின் வக்கீலுக்கு சட்டரீதியாக அளித்த மருத்துவ அறிக்கையே சிறையில் கெஜ்ரிவாலுக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் என்பதை காட்டுகிறது.

கடந்த ஜூன் 3-ந் தேதிக்கும், ஜூலை 7-ந் தேதிக்கும் இடையே கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 26 தடவை குறைந்துள்ளது. சிறையில் கெஜ்ரிவாலை கொல்ல பா.ஜனதா சதி செய்கிறது. முதலில், கெஜ்ரிவால் அதிகமாக சாப்பிடுவதாக பா.ஜனதா கூறியது. இப்போது, அவர் எதுவுமே சாப்பிடாமல் இருப்பதாக கூறுகிறது. யாராவது தங்களது உயிரை முடித்துக்கொள்ள இப்படி செய்வார்களா?" என்று சஞ்சய் சிங் கூறினார்.

1 More update

Next Story