'சனாதனத்தை அவமதித்தால் விளைவுகளை சந்திக்க வேண்டும்' - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து


சனாதனத்தை அவமதித்தால் விளைவுகளை சந்திக்க வேண்டும் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து
x
தினத்தந்தி 3 Dec 2023 9:28 AM GMT (Updated: 3 Dec 2023 11:41 AM GMT)

மகத்தான வெற்றியைப் பெற்ற பா.ஜ.க.வுக்கு வாழ்த்துகள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது. அதேவேளை தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சனாதன தர்மத்தை அவமதித்தால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும். மகத்தான வெற்றியைப் பெற்ற பா.ஜ.க.வுக்கு வாழ்த்துகள். இது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் அற்புதமான தலைமைக்கும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் சிறப்பான பணிக்கும் மற்றொரு சான்று" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சனாதன தர்மம் குறித்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story