விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் வாலிபருக்கு, ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி இல்லை
பெங்களூருவில் சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் வாலிபருக்கு, ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதி கிடைக்கவில்லை என அவரது மனைவி குற்றம்சாட்டி உள்ளார்.
வித்யாரண்யபுரம்:
பெங்களூருவில் சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் வாலிபருக்கு, ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதி கிடைக்கவில்லை என அவரது மனைவி குற்றம்சாட்டி உள்ளார்.
சாலை பள்ளத்தால்...
பெங்களூரு வித்யாரண்யபுரா கிரிதாமா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப்(வயது 36). இவரது மனைவி சீமா. சம்பவத்தன்று சந்தீப் தனது ஸ்கூட்டரில் கங்கம்மா சர்க்கிள் அருகே சென்றபோது சாலை பள்ளத்தை தவிர்ப்பதற்காக நிறுத்த முயன்றார்.
அப்போது அவர் சாலை பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சுய நினைவை இழந்தார். எனினும், அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி ஜாலஹள்ளி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் விபத்துக்கு காரணம் சாலை பள்ளம் என வழக்குப்பதிவு செய்ய மறுத்தனர். தற்போது சந்தீப் மீண்டும் சுய நினைவுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றச்சாட்டு
ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லை என டாக்டர்கள் கூறுவதாக சந்தீப்பின் மனைவி குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து சுகாதார துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் சந்தீப்பிற்கு வேண்டிய வசதிகளை விக்டோரியா ஆஸ்பத்திரியில் செய்து கொடுக்க டாக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.