ஜூனியர் என்.டி.ஆரின் உறவினர் நடிகர் நந்தமுறி தாரக ரத்னா, பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதி


ஜூனியர் என்.டி.ஆரின் உறவினர் நடிகர் நந்தமுறி தாரக ரத்னா, பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதி
x

ஜூனியர் என்.டி.ஆரின் உறவினரான நடிகர் நந்தமுறி தாரக ரத்னா, பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

தெலுங்கு திரைஉலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுறி தாரக ரத்னா. இவர் பிரபல நடிகரான ஜூனியர் என்.டி.ஆரின் உறவினர் ஆவார். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் பாதயாத்திரையில் நந்தமுறி தாரக ரத்னா கலந்து கொண்டார். அப்போது திடீரென நந்தமுறி தாரக ரத்னாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சரிந்து விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் குப்பம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக அவர் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமராவின் பேரன் ஆவார்.

1 More update

Next Story