இமாசல பிரதேச துணை முதல்-மந்திரி மருத்துவமனையில் அனுமதி


இமாசல பிரதேச துணை முதல்-மந்திரி மருத்துவமனையில் அனுமதி
x

வீட்டுக்கு வெளியே நடைபயிற்சி செய்தபோது, கீழே விழுந்த இமாசல பிரதேச துணை முதல்-மந்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்-மந்திரியாக சுக்வீந்தர் சிங் இருந்து வருகிறார். அவரது அரசில் துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிஹோத்ரி பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், சிம்லாவில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே துணை முதல்-மந்திரி முகேஷ் இன்று நடைபயிற்சி மேற்கொண்டார். இதில், அவர் தவறி கீழே விழுந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

அவரை மருத்துவர்கள் தங்களது கண்காணிப்பின் கீழ் வைத்து சிகிச்சை அளித்தனர். அவர் சிகிச்சைக்கு பின்னர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

1 More update

Next Story