கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம்...!


கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம்...!
x

தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3-ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3-ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.

மொத்தம் 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஒட்டுமொத்த வாக்குவங்கியில் 5% தமிழர்கள் வசித்து வருகின்றனர்.பெங்களூரு, கோலார், ஆகிய பகுதிகளில் பாஜகவிடம் கேட்டுப்பெற அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1983,1989,1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முனியப்பா என்பவர் வெற்றி பெற்றிருக்கிறார். பெங்களூரு மாநகராட்சியில் அதிமுக சார்பில் 9 பேர் கவுன்சிலர்களாக இருந்துள்ளனர். கேஜிஎப் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பக்தவச்சலம் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக சட்டமன்றத்தேர்தலில் ஏற்கனவே சில முறை அதிமுக வென்ற வரலாறு உள்ளது.


Next Story