காஷ்மீரில் 6-வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை


காஷ்மீரில் 6-வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை
x

தேடுதல் வேட்டையின்போது நேற்று முன்தினம் மாலையில் இருந்து இருதரப்பிலும் துப்பாக்கி சூடு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின்போது 2 ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி வீர மரணம் அடைந்தனர். 2 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு நேற்று 6-வது நாளாக வேட்டை நீடித்தது.

காடோல் வனப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க, டிரோன்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. குகை போன்ற பதுங்குமிடங்கள், புதர்களில் அவர்கள் மறைந்து கொள்வது, குண்டுகளுக்கு தப்பி ஓடுவது போன்ற காட்சிகள் கேமராவில் பதிவானது.

தேடுதல் வேட்டையின்போது நேற்று முன்தினம் மாலையில் இருந்து இருதரப்பிலும் துப்பாக்கி சூடு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இருந்தபோதிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்களா? என்பது பற்றியும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

1 More update

Next Story