ஆந்திரா: வேன் மீது லாரி மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு.!
விபத்தில் படுகாயமடைந்த மேலும், 11 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அன்னமயா,
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெத்தம்பள்ளி அருகே வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் திருப்பதிக்கு சென்று திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story