அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை


அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை
x
தினத்தந்தி 11 March 2023 11:15 PM GMT (Updated: 11 March 2023 11:16 PM GMT)

அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.

ரூ.814 கோடி கருப்பு பணம்

ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி. குழும அதிபர் அனில் அம்பானி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அனில் அம்பானி சுவிஸ் வங்கி கணக்கில் இருந்த ரூ.814 கோடியை மறைத்து ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையின் நோட்டீசில் கூறப்பட்டு இருந்தது. கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் அனில் அம்பானிக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இடைக்கால தடை

வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து அனில் அம்பானி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், "கருப்பு பணம் சட்டம் 2015-ம் ஆண்டு இயற்றப்பட்டது. தனது சார்ந்த சுவிஸ் வங்கி பணபரிமாற்றம் 2006-07 மற்றும் 2010-11 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது என கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது வருமான வரி ஏய்ப்பு விவகாரத்தில் அனில் அம்பானி மீது வருகிற 17-ந் தேதி வரை நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறையினருக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது.


Next Story