ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை


ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை
x

கோப்புப்படம்

ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

'நீட்' தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, திராவிடர் கழக தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த திரிஷா மகாலட்சுமி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.


Next Story