பிரதமர் மோடியுடன் ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் சந்திப்பு
x

பிரதமர் மோடியை ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் சந்தித்தார்.

டெல்லி,

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் நேற்று திறக்கப்பட்டது. மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவன நேரடி விற்பனை நிலையத்தை அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை மாதுரி தீட்ஷித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை திறக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் விற்பனையகத்திற்கு வந்து தங்களுக்கு விரும்பிய ஐ போன்களை வாங்கி சென்றனர். இதனை தொடந்து நாளை ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது நேரடி விற்பனை நிலையம் டெல்லியில் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து டிம் குக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அன்பான வரவேற்பிற்கு நன்றி பிரதமர் மோடி. கல்வி முதல் தொழில்நுட்பம், உற்பத்தி, சுற்றுச்சூழல் வரை இந்தியா முழுவதும் வளரவும் முதலீடுகள் செய்யவும் எதிர்காலத்தில் இந்தியாவில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கம் குறித்த உங்கள் பார்வையை நாங்கள் பகிர்கிறோம்' என பதிவிட்டுள்ளார்.


Next Story