ஜெய்ப்பூர்-பெங்களூரு விமானத்தில் நடுவானில் ஊழியருடன் தகராறில் ஈடுபட்ட நபர் கைது


ஜெய்ப்பூர்-பெங்களூரு விமானத்தில் நடுவானில் ஊழியருடன் தகராறில் ஈடுபட்ட நபர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2023 9:18 AM GMT (Updated: 20 Nov 2023 10:59 AM GMT)

அந்த நபருடைய பெயர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் விமான நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை.

புதுடெல்லி,

இண்டிகோ ஏர்லைன் வெளியிட்ட அறிக்கையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோ விமான நிறுவனத்தின் 6இ 556 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இதில், பயணி ஒருவர் குடிபோதையில், விமான ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டார். தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தபோதும், அவருடைய அணுகுமுறையை அவர் நிறுத்தி கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து, அவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து சென்றனர். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பிற பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது.

எனினும், அந்த நபருடைய பெயர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து, அவரை விமான நிலைய அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த மாதம், நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Next Story