ஆற்றில் விழுந்த சக வீரர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்


ஆற்றில் விழுந்த சக வீரர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்
x

ஆற்றில் விழுந்த சக வீரர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் நாயக் அமொல் கொரி. இவர் அருணாச்சலபிரதேசத்தில் சீன எல்லையில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே, கடந்த 14-ம் தேதி மாலை 4 மணியளவில் அமொல் மேலும் 2 வீரர்கள் கமெங் பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றுப்படுகையில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால் ஆற்றுப்படுகையில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 3 வீரர்களும் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, ஆற்று வெள்ளத்தில் போராடிய சக வீரர்கள் 2 பேரையும் அமொல் காப்பாற்றியுள்ளார். ஆனால், ஆற்றின் அதீத வேகத்தில் அமொல் இழுத்து செல்லப்பட்டார். ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட அமொல் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து அமொல் உடல் அவரது சொந்த ஊரான வாசிம் மாவட்டம் சன்கான்ஸ் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. சக வீரர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த அமொலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

உயிரிழந்த ராணுவ விரர் அமொலுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story