காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்து: எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்


காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்து: எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்
x

மலைப்பாங்கான பகுதியில் வாகனம் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டம் மன்கொட் செக்டார் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த வாகனம் எல்லை பாதுகாப்பு படை வீரர்ககளை ஏற்றிக்கொண்டு மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 More update

Next Story