அமித்ஷாவின் அருணாசலபிரதேச பயணம்: சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது


அமித்ஷாவின் அருணாசலபிரதேச பயணம்: சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது
x

அமித்ஷாவின் அருணாசலபிரதேச பயணத்துக்கு சீனா தெரிவித்த எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது.

புதுடெல்லி,

இந்திய மாநிலமான அருணாசலபிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அங்கு சென்றார்.

அவரது வருகைக்கு சீனா அரசின் செய்தித்தொடர்பாளர் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தார்.

அதே சமயத்தில், அமித்ஷா அருணாசலபிரதேசத்தில் பேசுகையில், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்று கூறினார்.

இந்நிலையில், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் சீனாவின் எதிர்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த பகுதி

சீன அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு செல்வது போலவே, அருணாசலபிரதேசத்துக்கும் இந்திய தலைவர்கள் வழக்கம்போல் செல்வார்கள்.

அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், பிரிக்க இயலாத பகுதியாகவும் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்.

இதுபோன்ற பயணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றது. உண்மைத்தன்மையை எந்த விதத்திலும் மாற்றிவிடாது என்று அவர் கூறினார்.


Next Story