கர்நாடகம் வளர்ச்சி பாதையில் பயணிக்க இரட்டை என்ஜின் அரசு தேவை; அசாம் முதல்-மந்திரி இமந்த் பிஸ்வா சர்மா பேச்சு


கர்நாடகம் வளர்ச்சி பாதையில் பயணிக்க இரட்டை என்ஜின் அரசு தேவை; அசாம் முதல்-மந்திரி இமந்த் பிஸ்வா சர்மா பேச்சு
x

கர்நாடகம் வளர்ச்சி பாதையில் பயணிக்க இரட்டை என்ஜின் அரசு தேவை என்று அசாம் முதல்-மந்திரி இமந்த் பிஸ்வா சர்மா கூறினார்.

பல்லாரி:

கர்நாடகம் வளர்ச்சி பாதையில் பயணிக்க இரட்டை என்ஜின் அரசு தேவை என்று அசாம் முதல்-மந்திரி இமந்த் பிஸ்வா சர்மா கூறினார்.

பிரதமராக்க வேண்டும்

பல்லாரி மாவட்டம் கம்பிளியில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அசாம் முதல்-மந்திரி இமந்த் பிஸ்வா சர்மா கலந்துகொண்டு பேசியதாவது:-

கர்நாடகம் வளர்ச்சி பாதையில் பயணிக்க இரட்டை என்ஜின் அரசு தேவை. சமீபத்தில் நடைறெ்ற குஜராத் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வென்றுள்ளது. கர்நாடகம் முழுமையாக வளர்ச்சி பெற பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் அரை இறுதி போன்றது. இதில் பா.ஜனதாவை வெற்றி பெற செய்து அதன் மூலம் மத்தியில் மீண்டும் மோடியை பிரதமராக்க வேண்டும்.

ஏராளமான திட்டங்கள்

இரட்டை என்ஜின் அரசால் ஏராளமான திட்டங்களை கொண்டு வர முடியும். இதனால் இங்குள்ள மக்கள் பயன் பெறுவார்கள். கர்நாடகத்திற்கு மத்திய அரசு அதிகளவில் திட்டங்களை வழங்கியுள்ளது. கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் மாநில அரசும் தலா ரூ.4 ஆயிரம் வழங்குகிறது.

இவ்வாறு இமந்த் பிஸ்வா சர்மா பேசினார்.

இதில் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story