ஓட்டல் ஊழியர்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்


ஓட்டல் ஊழியர்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்
x

ஓட்டல் ஊழியர்களை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

பெங்களூரு:


பெங்களூரு ஜே.ஜே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் கடந்த 10-ந் தேதி இரவு ரோந்து சென்றனர். அப்போது ஒரு ஓட்டல் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்து இருந்தது. அப்போது ஓட்டலை மூடும்படி கூறிவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் சென்று விட்டார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த ஓட்டல் மூடாமல் திறந்து கிடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ், ஓட்டல் ஊழியர்களை லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. ஓட்டல் ஊழியர்களை லோகேஷ் லத்தியால் தாக்கியதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் லோகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.


Next Story