ஆந்திராவில் சட்டமன்ற மேலவை தேர்தல்; திருப்பதியில் 7 ஆயிரம் போலி வாக்காளர்கள் - எதிர்கட்சிகள் போலீசில் புகார்
போலியானவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஐதராபாத்,
ஆந்திராவில் வரும் 13-ந்தேதி சட்டமன்ற மேலவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 7 ஆயிரம் போலி பட்டதாரிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், போலியானவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே திருப்பதியில் 5 முதல் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் கூட பட்டதாரிகள் என குறிப்பிடப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அது தொடர்பான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், ஆனால் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story