மராட்டியத்தில் இவையெல்லாம் விபத்து பகுதி.. 1004 பிளாக்ஸ்பாட்களை அடையாளம் காட்டிய அதிகாரிகள்


மராட்டியத்தில் இவையெல்லாம் விபத்து பகுதி.. 1004 பிளாக்ஸ்பாட்களை அடையாளம் காட்டிய அதிகாரிகள்
x

விபத்துக்கான காரணங்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களை ஆராய்ந்து இந்த விரிவான அறிக்கையை தொகுத்துள்ளனர்.

புனே,

மராட்டிய மாநிலத்தில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விபத்து நடக்க வாய்ப்பு உள்ள அபாயகரமான இடங்களை அடையாளம் காட்டி உள்ளனர்.

பல்வேறு சாலைகளில் 'பிளாக்ஸ்பாட்கள்' என்று பொதுவாக அழைக்கப்படும் விபத்துகள் அதிகம் நடக்கும் 1004 பகுதிகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் புனேயில் மட்டும் 23 அபாயகரமான இடங்கள் உள்ளன. விபத்து அபாயங்களை தவிர்க்க, விரிவான மூன்று அடுக்கு செயல்திட்டத்தை விரைவாக செயல்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணங்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களை ஆராய்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இந்த விரிவான அறிக்கையை தொகுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பொதுப்பணித் துறை மற்றும் மராட்டிய மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த அதிகார வரம்புகளுக்குள் இந்த ஆபத்தான பிளாக்ஸ்பாட்களை குறைப்பதற்கு, அரசு அமைப்புகள் ஒத்துழைப்பு அளித்து நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளன.

கடந்த ஆண்டு மட்டும் மாநிலத்தில் 33,039 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 14,883 பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story