மைசூருவில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்


மைசூருவில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மைசூருவில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மைசூரு-

மணிப்பூரில் கலவரம் நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

மேலும் கர்நாடகத்திலும் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மைசூரு கலெக்டர் அலுவலகம் முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மைசூரு நகர தலைவர் சீனிவாஸ் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் மணிப்பூரில் நடந்த சம்பவம் என்பது நாட்டிற்கே வெட்கக்கேடானது என்றனர். மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story