லாலு பிரசாத் ஜாமினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு


லாலு பிரசாத் ஜாமினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு
x
தினத்தந்தி 18 Aug 2023 3:04 PM IST (Updated: 18 Aug 2023 3:41 PM IST)
t-max-icont-min-icon

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாட்னா,

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், மாநிலத்தில் மாட்டு தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குவதில் 950 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளித்த கோர்ட்டு அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில் சிறை சென்ற லாலு பிரசாத் பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே, லாலு பிரசாத்திற்கு எதிராக தொடரப்பட்ட மாட்டுத்தீவன ஊழல் வழக்கு விசாரணை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த 4 வழக்குகளில் லாலு பிரசாத்திற்கு ஐகோர்ட்டு ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், மாட்டுத்தீவன வழக்கில் லாலு பிரசாத்திற்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு வழங்கிய ஜாமினை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனு வரும் 25-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story