மும்பையில் கிரிக்கெட் போட்டிகளின்போது வாண வேடிக்கை ரத்து - ஜெய்ஷா


மும்பையில் கிரிக்கெட் போட்டிகளின்போது வாண வேடிக்கை ரத்து - ஜெய்ஷா
x

டெல்லியை விட மும்பையின் பல பகுதிகளில் சில நாட்களாகவே காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

மும்பை,

நாட்டின் தலைநகர் டெல்லிதான் காற்று மாசுபாடு கொண்ட நகரமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த பட்டியலில் இப்போது மும்பையும் இணைந்துள்ளது. டெல்லியை விட மும்பையின் பல பகுதிகளில் சில நாட்களாகவே காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க மும்பை மாநகராட்சி நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

இந்தநிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:-

சுற்றுச்சூழலைப்பாதுகாப்பதில் பிசிசிஐ கவனம் கொள்கிறது. மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின்போது எந்த வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்படாது. இது தொடர்பாக ஐசிசியிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். ரசிகர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிசிசிஐ எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்றார்.


Next Story