டெல்லியில் காரில் வாலிபரை படுக்க வைத்து... கதறவிட்ட இளம்பெண்கள்


டெல்லியில் காரில் வாலிபரை படுக்க வைத்து... கதறவிட்ட இளம்பெண்கள்
x

டெல்லியில் வாலிபரை கெஞ்ச விட்டு, இளம்பெண்கள் கார் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

காரின் முன்புற பானட்டில் ஒரு ஆணை படுக்க வைத்து பெண்கள் காரோட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் கடும் விவாதத்தை தூண்டி உள்ளது.

டெல்லியில் இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. சச்சின்குப்தா என்பவரது இணையதள பக்கத்தில் வெளியான இந்த வீடியோ 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதுடன், கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அந்த வீடியோவில், காருக்குள் இருக்கும் 2 இளம் பெண்கள் காரை இயக்குகிறார்கள். காரின் பானட் பகுதியில் படுத்திருக்கும் ஆண், கைகளை கூப்பி அவர்களிடம் கெஞ்சுவதுபோல தெரிகிறது. பெண்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டாலும் காரை நிறுத்தாமல் ஓட்டிச் செல்கிறார்கள்.

இது டிரெண்டிங் ஆவதற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோவா அல்லது காரில் படுத்து தூங்கியவரை கோபத்தில் தண்டிக்கும்விதமாக பெண்கள் காரை ஓட்டிச் சென்றார்களா என்பது பற்றி தெரியவில்லை.

இதுகுறித்து கண்டன கருத்துகளை பதிவிட்ட பார்வையாளர்கள், போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story