மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.

Image Courtacy: ANI
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சுமன் கஞ்சிலால் திரிணாமுல் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவார் தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தவர் சுமன் கஞ்சிலால்.
இவர் அந்த கட்சியில் இருந்து விலகி நேற்று ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். அவரை கட்சிக்கு வரவேற்ற திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, கட்சியின் கொடியை அவரிடம கொடுத்தார்.
மாநிலத்தில் இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், சுமன் கஞ்சிலால் கட்சி மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இவரது விலகலால் பா.ஜனதாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






