பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு


பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 4 March 2024 5:22 AM GMT (Updated: 4 March 2024 5:44 AM GMT)

பெங்களூருவில் உள்ள உணவகத்தில் கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயம் அடைந்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே புரூக்பீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் அமைந்துள்ளது. கடந்த 1-ந் தேதி மதியம் 12.55 மணியளவில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். குண்டுவெடிப்பு நடந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

இந்தநிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது மத்திய உள்துறை அமைச்சகம். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் அரசுப்பேருந்தில் வந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்திற்கும் 2014-ம் ஆண்டு மதுரை குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரு குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை, மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு, ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்புக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.


Next Story