பீகார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் காலமானார்


பீகார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் காலமானார்
x

பீகாரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சுபாஷ் சிங் இன்று காலை உடல்நல குறைவால் காலமானார்.

பாட்னா,



பீகாரில் பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுபாஷ் சிங். முன்னாள் மந்திரியான இவர் உடல்நலம் பாதித்த நிலையில், சில காலங்களுக்கு முன் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில், மீண்டும் இவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 11.30 மணியளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இந்த சூழலில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மறைந்து உள்ளார். இந்த தகவலை பீகாரில் சமீபத்தில் துணை முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்ட தேஜஸ்வி யாதவ் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

கூட்டணியில் இருந்த பா.ஜ.க.வுடனான உறவை முறித்து கொண்டு வெளியே வந்த நிதிஷ் குமார், பின்னர் காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியானார்.


Next Story