முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? பீகாரில் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி
பீகார் மாநில கவர்னரை சந்தித்து நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பாட்னா,
Live Updates
- 28 Jan 2024 1:13 PM IST
பாஜக கூட்டணிக்கு மீண்டும் திரும்பியுள்ள நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- 28 Jan 2024 12:57 PM IST
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக அளித்த கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். இன்று மாலை பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார்.
- 28 Jan 2024 12:14 PM IST
நிதிஷ் குமாரின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ் தாக்கு
- 28 Jan 2024 12:02 PM IST
பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியம். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பதால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (79), காங்கிரஸ் (19) ஆகிய கட்சிகளுடன் இணைந்து நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தார்.
தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறியுள்ளார். அதோடு முதல் மந்திரி பொறுப்பையும் ராஜினாமா செய்து இருக்கிறார். பாஜகவுக்கு 78 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் அக்கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நிதிஷ்குமார் அமைக்க உள்ளார். நிதிஷ் குமார் கடந்த 9 ஆண்டுகளில் 4-வது முறையாக கூட்டணியை மாற்றியுள்ளார்.
- 28 Jan 2024 11:46 AM IST
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்: நிதிஷ்குமார்
- 28 Jan 2024 11:37 AM IST
அரசியல் சூழல் காரணமாகவே மகா கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார். புதிய கூட்டணியை அமைக்க இருப்பதாகவும் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
- 28 Jan 2024 11:33 AM IST
இன்று மாலை மீண்டும் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
- 28 Jan 2024 11:29 AM IST
பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.பின்னர் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்துவதாக கூறி, லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்த நிதிஷ் குமார், பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதனிடையே எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை அமைப்பதிலும் நிதிஷ்குமார் முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழலில், பீகாரில் கூட்டணி கட்சியான லாலுபிரசாத் கட்சியுடன் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி வலுத்தது. இதனால், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நிதிஷ்குமார் தற்போது கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாகவும், தொடர்ந்து பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் இன்று மாலையே மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.