நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
x

பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும். ஒடிசாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story