முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு


முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
x

சட்டசபை தேர்தலையொட்டி முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சிக்காவியில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையும், சிகாரிபுராவில் எடியூரப்பா மகன் விஜயேந்திராவும் போட்டியிடுகிறார்கள்.

பெங்களூரு:

சட்டசபை தேர்தலையொட்டி முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சிக்காவியில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையும், சிகாரிபுராவில் எடியூரப்பா மகன் விஜயேந்திராவும் போட்டியிடுகிறார்கள்.

சட்டசபை தேர்தல்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக மொத்தம் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஆனால் ஆளும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருந்தது. அக்கட்சி கடந்த 4, 5 நாட்களாக வேட்பாளர் பட்டியல் தேர்வு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. பலரும் தங்களது வாரிசுகளுக்கு டிக்கெட் கேட்டனர். இதனால் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது.

இழுபறி நீடிப்பு

மேலும் எதிர்க்கட்சி தலைவர்களான சித்தராமையா, குமாரசாமி, டி.கே.சிவக்குமார் ஆகிேயாரை எதிர்த்து பலமான வேட்பாளர்களை நிறுத்த பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டது. சித்தராமையாவை எதிர்த்து வருணா தொகுதியில் எடியூரப்பா மகன் விஜயேந்திராவை நிறுத்த மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் எடியூரப்பா, விஜயேந்திரா தனது சொந்த தொகுதியான சிகாரிபுராவில் போட்டியிடுவார் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அதுபோல் சித்தராமையாவுக்கு எதிராக மந்திரி சோமண்ணாவை நிறுத்தவும், கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து மந்திரி ஆர்.அசோக்கையும், சென்னப்பட்டணா தொகுதியில் குமாரசாமிக்கு எதிராக முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வரையும் நிறுத்த அக்கட்சி முடிவு செய்தது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களுடன் மல்லுக்கட்ட அவர்கள் தயக்கம் காட்டினர். இதனாலும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஆகி வந்தது.

189 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில், கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா 189 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்த 189 வேட்பாளர்களில் 52 பேர் புதிய முகங்கள். 32 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள். ஆதிதிராவிடர் 30 பேரும், பழங்குடியினர் 16 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வேட்பாளர்களில் 9 டாக்டா்கள், 5 வக்கீல்கள், ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி, 3 ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலா்கள் 8 பேர், 8 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

சிகாரிபுரா- விஜயேந்திரா

இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மீண்டும் சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்தராவுக்கு சிகாரிபுரா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வருவாய்த்துறை மந்திரியாக உள்ள ஆர்.அசோக் பெங்களூரு பத்மநாபநகர் டி.கே.சிவக்குமார் போட்டியிடும் தொகுதியுடன் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

அதுபோல் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு தாவிய அனைவருக்கும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. சித்தராமையாவை எதிா்த்து தற்போது வீட்டு வசதி மந்திரியாக உள்ள சோமண்ணா களம் இறங்குகிறார். அத்துடன் சாம்ராஜ்நகர் தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார். ஆகமொத்தம் ஆர்.அசோக், சோமண்ணா ஆகிய 2 பேரும் தலா 2 தொகுதிகளில் களம் காண்கிறார்கள். ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமியை எதிர்த்து முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் போட்டியிடுகிறார்.

மேலும் ராஜாஜி நகர் தொகுதியில் முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொகுதி வேட்பாளர்

1. சிக்காவிபசவராஜ் பொம்மை

2. நிப்பானிசசிகலா ஜோலே

3. சிக்கோடிரமேஷ்கட்டி

4. அதானிமகேஷ் குமடஹள்ளி

5. காக்வாட்ஸ்ரீமந்த் பாலாசாகேப் பட்டீல்

6. குடச்சி(எஸ்.சி.)பி.ராஜீவ்

7. ராயபாக்(எஸ்.சி.)துரயோதன் ஐஹோலே

8. ஹுக்கேரிநிகில்ஹட்டி

9. அரபாவிபாலச்சந்திர ஜார்கிகோளி

10. கோகாக்ரமேஷ் ஜார்கிகோளி

11. யமகனமரடி(எஸ்.டி.)பசவராஜ் ஹுன்ரி

12. பெலகாவி வடக்குரவி பட்டீல்

13. பெலகாவி தெற்குஅபய் பட்டீல்

14. பெலகாவி புறநகர்நாகேஸ் மன்னல்கார்

15. கானாப்புராவிட்டல் அலகேகர்

16. கித்தூர்மகாந்தேஷ் தொட்டகவுடர்

17. பைலஹொங்கலாஜெகதீஷ் சன்னப்பா

18. சவதத்தி எல்லம்மா ரத்தின விஸ்வநாத் மாமனி

19. ராமதுர்காசிக்க ரேவண்ணா

20. முதோல்(எஸ்.சி.)கோவிந்த் கார்ஜோள்

21. தேரதாள்சித்துசவதி

22. ஜமகண்டிஜெகதீஷ் குடகுந்தி

23. பீலகிமுருகேஷ் நிரானி

24. பாதாமிசாந்தகவுடா பட்டீல்

25. பாகல்கோட்டைவீரபத்ரய்யா சரண்டிமட்

26. உனகுந்துதொட்டண்ணகவுடா பட்டீல்

27. முத்தேபீஹால்ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி

28. பபலேஸ்வர்விஜூகவுடா பட்டீல்

29. விஜயாப்புரா நகர்பசனகவுடா பட்டீல் யத்னால்

30. சிந்தகி ரமேஷ்பூசனூர்

31. அப்சல்புராமாலிகையா குத்தேதார்

32. ஜேவர்கிசிவன்னகவுடா பட்டீல்

33. சோராப்பூர்(எஸ்.டி.)நரசிம்ம நாயக்

34. சாகாப்புராஅமீன்ரெட்டி எலகி

35. யாதகிரிவெங்கடரெட்டி

36. சித்தாப்புரா(எஸ்.சி.)மணிகண்ட ராத்தோட்

37. சின்சோலி(எஸ்.சி.)டாக்டர் அவினாஷ் ஜாதவ்

38. கலபுரகி புறநகர்(எஸ்.சி.)பசவராஜ் மட்டிமோத்

39. கலபுரகி தெற்குதத்தாத்ரேயா பட்டீல் ரேவூர்

40. கலபுரகி வடக்குசந்திரகாந்த் பட்டீல்

41. ஆலந்தாசுபாஷ் குத்தேதார்

42. பசவ கல்யாண்சரணு சலகார்

43. உம்னாபாத்சித்து பட்டீல்

44. பீதர் தெற்குசைலேந்திர பெல்தாலே

45. அவுராத்(எஸ்.சி.)பிரபு சவான்

46. ராய்ச்சூர் புறநகர்(எஸ்.டி.)திப்பராஜ் ஹவால்தார்

47. ராய்ச்சூர்சிவராஜ் பட்டீல்

48. தேவதுர்கா(எஸ்.டி.)சிவன்னகவுடா நாயக்

49. லிங்கசுகூர்(எஸ்.சி.)மானப்பா வஜ்ஜல்

50. சிந்தனூர்கரியப்பா

51. மஸ்கி(எஸ்.டி.)பிரதாப்கவுடா பட்டீல்

52. குஸ்டகிதொட்டண்ணா கவுடா பட்டீல்

53. கனககிரி(எஸ்.சி.)பசவராஜ் தடேசகூர்

54. எலபுர்காஹாலப்பா ஆச்சார்

55. சிரஹட்டி(எஸ்.சி.)சந்துரு லமானி

56. கதக்அனில் மெனசினகாய்

57. நரகுந்துசி.சி.பட்டீல்

58. நவலகுந்துசங்கர் பட்டீல் முனேனகுப்பா

59. குந்துகோல்எம்.ஆர்.பட்டீல்

60. தார்வார்அம்ருத் அய்யப்பா தேசாய்

61. உப்பள்ளி கிழக்கு(எஸ்.சி.)கிராந்தி கிரண்

62. உப்பள்ளி மேற்குஅரவிந்த் பெல்லத்

63. ஹூலியால்சுனில் ஹெக்டே

64. கார்வார்ரூபாலி சந்தோஷ் நாயக்

65. குமட்டாதினகர்ஷெட்டி

66. பட்கல்சுனில் நாயக்

67. சிர்சிவிஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி

68. எல்லாப்புராசிவராம் ஹெப்பார்

69. பேடகிவிருபாக்ஷப்பா பல்லாரி

70. ஹிரேகெரூர்பி.சி.பட்டீல்

71. ராணிபென்னூர்அருண்குமார் பூஜார்

72. ஹடகலி(எஸ்.சி.)கிருஷ்ணா நாயக்

73. விஜயநகராசித்தார்த்சிங்

74. கம்பளி(எஸ்.டி.)டி.ஹெச்.சுரேஷ்பாபு

75. சிரகுப்பா(எஸ்.டி.)எம்.எஸ்.சோமலிங்கப்பா

76. பல்லாரி(எஸ்.டி.)ஸ்ரீராமுலு

77. பல்லாரி நகர்காலி சோமசேகர ரெட்டி

78. சண்டூர்(எஸ்.டி.)சில்பா ராகவேந்திரா

79. கூடலகி(எஸ்.டி.)லோகேஷ் நாயக்

80. முலகால்மூரு(எஸ்.டி.)திப்பேசாமி

81. சல்லகெரே(எஸ்.டி.)அனில்குமார்

82. சித்ரதுர்காதிப்பாரெட்டி

83. இரியூர்பூர்ணிமா சீனிவாஸ்

84. ஒசதுர்காலிங்கமூர்த்தி

85. ஒலல்கெரே(எஸ்சி.)சந்திரப்பா

86. ஜெகளூர்(எஸ்.டி.)ராமச்சந்திரா

87. ஹரிகராபி.பி.ஹரிஷ்

88. ஒன்னாளிஎம்.பி.ரேணுகாச்சார்யா

89. சிவமொக்கா புறநகர்(எஸ்.சி.)அசோக் நாயக்

90. பத்ராவதிமாங்கோட்டி ருத்ரேஷ்

91. தீர்த்தஹள்ளிஅரக ஞானேந்திரா

92. சிகாரிபுராபி.ஒய்.விஜயேந்திரா

93. சொரப்குமார் பங்காரப்பா

94. சாகர்ஹரதாளு ஹாலப்பா

தொகுதி வேட்பாளர்

95. குந்தாப்புராகிரண்குமார் கோட்டி

96. உடுப்பியஷ்பால் சுவர்ணா

97. காபுகுர்மே சுரேஷ் ஷெட்டி

98. கார்கலாசுனில்குமார்

99. சிருங்கேரி ஜீவராஜ்

100. சிக்கமகளூருசி.டி.ரவி

101. தரிகெரேடி.எஸ்.சுரேஷ்

102. கடூர்கே.எஸ்.பிரகாஷ்

103. சிக்கநாயக்கனஹள்ளிஜே.சி.மாதுசாமி

104. திப்தூர்பி.சி.நாகேஸ்

105. துருவகெரேமசாலா ஜெயராம்

106. குனிகல்கிருஷ்ணகுமார்

107. துமகூரு நகர்ஜோதி கணேஷ்

108. துமகூரு புறநகர்சுரேஷ் கவுடா

109. கொரட்டகெரே(எஸ்.சி.)அனில் குமார்

110. சிராராஜேஸ் கவுடா

111. பாவகடா(எஸ்.சி.) கிருஷ்ணாநாயக்

112. மதுகிரிஎல்.சி.நாகராஜ்

113. கவுரிபிதனூர்சசிதர்

114. பாகேபள்ளிமுனிராஜ்

115. சிக்பள்ளாப்பூர்கே.சுதாகர்

116. சிந்தாமணிவேணுகோபால்

117. சீனிவாசப்பூர்குஞ்ஜுரு சீனிவாசரெட்டி

118. முல்பாகல்(எஸ்.சி.)சீகேஹள்ளி சுந்தர்

119. பங்காருபேட்டை(எஸ்.சி.)எம்.நாராயணசாமி

120. கோலார்வர்த்தூர் பிரகாஷ்

121. மாலூர்கே.எஸ்.மஞ்சுநாத் கவுடா

122. எலகங்காஎஸ்.ஆர்.விஸ்வநாத்

123. கே.ஆர்.புரம்பி.ஏ.பசவராஜ்

124. பேடராயனபுராதம்மேஷ்கவுடா

125. யஸ்வந்தபுரம்எஸ்.டி.சோமசேகர்

126. ராஜராஜேஸ்வரிநகர்முனிரத்னா நாயுடு

127. தாசரஹள்ளிஎஸ்.முனிராஜூ

128. மகாலட்சுமி லே-அவுட்கே.கோபாலய்யா

129. மல்லேசுவரம்அஸ்வத்நாராயண்

130. புலிகேசிநகர்(எஸ்.சி.)முரளி

131. சர்வக்ஞ்நகர்பத்மநாபரெட்டி

132. சி.வி.ராமன்நகர்(எஸ்.சி.)எஸ்.ரகு

133. சிவாஜிநகர்என்.சந்திரா

134. சாந்திநகர்சிவக்குமார்

135. காந்திநகர்ஏ.ஆர்.சப்தகிரிகவுடா

136. ராஜாஜிநகர்எஸ்.சுரேஷ்குமார்

137. விஜயநகர்எச்.ரவீந்திரா

138. சாம்ராஜ்பேட்டைபாஸ்கர் ராவ்

139. சிக்பேட்டைஉதய் கருடாச்சார்

140. பசவனகுடிரவி சுப்பிரமணியா

141. பத்மநாபநகர்ஆர்.அசோக்

142. பி.டி.எம். லே-அவுட்ஸ்ரீதர் ரெட்டி

143. ஜெயநகர்சி.கே.ராமமூர்த்தி

144. பொம்மனஹள்ளிசதீஸ் ரெட்டி

145. பெங்களூரு தெற்குஎம்.கிருஷ்ணப்பா

146. ஆனேக்கல்(எஸ்.சி.)ஹூல்லள்ளி சீனிவாஸ்

147. ஒசக்கோட்டைஎம்.டி.பி.நாகராஜ்

148. தேவனஹள்ளி(எஸ்.சி.)பில்ல முனிஷாம்பா

149. தொட்டபள்ளாப்புராதிராஜ் முனிராஜூ

150. நெலமங்களா(எஸ்.சி.)சப்தகிரி நாயக்

151. மாகடிபிரசாத் கவுடா

152. ராமநகர்கவுதம் கவுடா

153. கனகபுராஆர்.அசோக்

154. சென்னப்பட்டணாசி.பி.யோகேஷ்வர்

155. மலவள்ளி(எஸ்.சி.)முனிராஜூ

156. மத்தூர்எஸ்.பி.சுவாமி

157. மேல்கோட்டைஇந்திரேஷ் குமார்

158. மண்டியாஅசோக் ஜெயராம்

159. ஸ்ரீரங்கப்பட்டணாஇந்தவாலு சச்சிதானந்தா

160. நாகமங்களாசுதா சிவராம்

161. கே.ஆர்.பேட்டைகே.சி.நாராயணகவுடா

162. பேளூர்ஹூல்லள்ளி கே.சுரேஷ்

163. ஹாசன்பிரீத்தம் கவுடா

164. ஒலேநரசிப்புராதேவராஜ் கவுடா

165. அரக்கல்கோடுயோகா ரமேஷ்

166. சக்லேஷ்புரா(எஸ்.சி.)சீமந்த் மஞ்சு

167. பெல்தங்கடிஹரீஷ் பூஞ்சா

168. மூடபித்ரிஉமாநாத் கோட்டியான்

169. மங்களூரு வடக்குபரத் ஷெட்டி

170. மங்களூரு தெற்குவேதவியாஸ் காமத்

171. மங்களூருசதீஸ் கும்பாலா

172. பண்ட்வால்ராஜேஸ் நாயக்

173. புத்தூர்ஆஷா திம்மப்பா

174. சுள்ளியா(எஸ்.சி.)பகிரதி முருல்யா

175. மடிகேரிஅப்பச்சு ரஞ்சன்

176. விராஜ்பேட்டைகே.ஜி.போப்பையா

177. பிரியப்பட்டணாசி.எச்.விஜயசங்கர்

178. கே.ஆர்.நகர்வெங்கடேஷ் ஹொசலி

179. உன்சூர்தேவரஹள்ளி சோமசேகர்

180. நஞ்சன்கூடு(எஸ்.சி.)பி.ஹர்ஷவர்தன்

181. சாமுண்டீஸ்வரிகாவேஷ் கவுடா

182. சாமராஜாஎல்.நாகேந்திரா

183. நரசிம்மராஜாசந்தேஷ் சுவாமி

184. வருணாவி.சோமண்ணா

185. டி.நரசிப்புரா(எஸ்.சி.)ரேவண்ணா

186. ஹனூர்பிரீத்தம் நாகப்பா

187. கொள்ளேகால்(எஸ்.சி.)என்.மகேஷ்

188. சாம்ராஜ்நகர்வி.சோமண்ணா

189. குண்டலுபேட்டைநிரஞ்சன்குமார்


Next Story