மாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா போட்டி


மாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா போட்டி
x

மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் போட்டியிடுகிறார்.

டெல்லி,

15 மாநிலங்களை சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்தை நிரப்ப வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா போட்டியிடுகிறார். அவர் குஜராத்தில் இருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல், நேற்று காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவானுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட அசோக் சவான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


Next Story