தேர்தல் நடத்தை விதிமீறல்: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறை - உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு


தேர்தல் நடத்தை விதிமீறல்: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறை - உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறை விதித்து உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராம்பூர்,

உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மிலாக் தொகுதி எம்.எல்.ஏ., ராஜ்பாலா சிங். பா.ஜனதாவை சேர்ந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. உரிய அனுமதி பெறாமல் பிரசார கூட்டம் ஒன்றை நடத்தியதற்காக ஷாசாத் நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜ்பாலா சிங் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் ஒருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

ஆளும் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story
  • chat