தரமான சாலைகளே விபத்துக்கள் அதிகரிப்பிற்கு காரணம் - பாஜக எம்.எல்.ஏ. விளக்கம்
தரமான சாலைகளே விபத்துக்கள் அதிகரிப்பிற்கு காரணம் என பாஜக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டம் மண்டானா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. நாராயண் பட்டேல். இவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின் நாராயண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மோசமான சாலைகள் குறைவான சாலைவிபத்துகளை ஏற்படுத்துவதாக நீங்கள் நம்புகிறீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நாராயண், எனது தொகுதியில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. சாலைகள் மிகவும் தரமாக உள்ளது, வாகனங்கள் மிகவும் வேகமாக செல்கின்றன இதனால், கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. இதன் நான் அனுபவித்துள்ளேன். அனைவரும் அல்ல சில டிரைவர்கள், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் சாலைவிபத்துக்கு காரணமாகுகின்றனர்' என்றார்.
Related Tags :
Next Story