அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு 60 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க.


அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு 60 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க.
x
தினத்தந்தி 13 March 2024 11:40 AM GMT (Updated: 13 March 2024 12:41 PM GMT)

அருணாச்சல முதல்-மந்திரி பிமா காண்டு முக்டோ தொகுதியில் போட்டியிடுகிறார்.

இட்டாநகர்,

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 41 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

மேலும் மாநிலத்தில் நடப்பாண்டிலேயே சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கும் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பா.ஜ.க. தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

முதல்-மந்திரி பிமா காண்டு முக்டோ தொகுதியில் போட்டியிடுகிறார். கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி சமீபத்தில் நடந்த கூட்டத்தில் சட்டப்பேரவைக்கான வேட்பாளர்களின் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்தது.

மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.


Next Story