நாட்டின் மதச்சார்பின்மை அஸ்திவாரத்தை அசைக்க பாஜக முயற்சி - மெகபூபா முப்தி


நாட்டின் மதச்சார்பின்மை அஸ்திவாரத்தை அசைக்க பாஜக முயற்சி - மெகபூபா முப்தி
x

Image Courtesy: PTI

நாட்டின் மதச்சார்பின்மை அஸ்திவாரத்தை அசைக்க பாஜக முயற்சிப்பதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், 'மதராசா'-க்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மெகபூபா, இந்தியாவை குஜராத் மாடல் ஆக்குவதா? அல்லது உத்தரபிரதேச மாடல் ஆக்குவதா? என போட்டி நிலவி வருகிறது. அந்த வரிசையில் இதையெல்லாம் விட அசாம் முதல்-மந்திரி முன்னிலையில் உள்ளார். இஸ்லாமியர் என நினைத்து இந்து மதத்தை சேர்ந்தவர் மத்தியபிரதேசத்தில் அடித்துக்கொல்லப்பட்டதை நீங்கள் பார்த்தீர்கள். நாட்டின் அஸ்திவாரத்தையே அசைப்பது பற்றி அவர்கள் (பாஜக) பேசுகின்றனர். நாடு உருவான மதச்சார்பின்மை, நாட்டை இயக்கும் அரசியலமைப்பை பாஜக அசைக்கிறது. அரசியலமைப்பை பாஜக சிதைக்கிறது.

ஒட்டுமொத்த நாட்டையும் குஜராத் மாடல், உத்தரபிரதேச மாடல், அசாம் மாடல், மத்தியபிரதேச மாடலாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. இஸ்லாமிய மதத்தினரை அதிகம் துன்புறுத்துவது யார் என்பதில் இந்த மாநிலங்களில் முதல்-மந்திரிகளிடையே போட்டி நிலவுகிறது.

இஸ்லாமிய மதத்தினர் தூண்டப்படுவார்கள் என்பதற்காக கோவில் - மசூதி போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை பாஜக தலைவர்கள் எழுப்புகின்றனர். இதன் மூலம் இஸ்லாமிய மதத்தினர் எதிர்வினையாற்றும்போது அதை வாய்ப்பாக பயன்படுத்தி குஜராத், உத்தரபிரதேசத்தில் நடந்ததைபோல இஸ்லாமிய மதத்தினரை இனப்படுகொலை செய்ய பாஜக தலைவர்கள் முயற்சிக்கின்றனர்' என்றார்.

இதையும் படிக்க... 'மதராசா' என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; அசாம் முதல்-மந்திரி பேச்சு


Next Story