மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் - நிதின் கட்காரி பேச்சு


மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் - நிதின் கட்காரி பேச்சு
x

கோப்புப்படம்

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசி னார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்து, 'ஹாட்ரிக்' அடிக்க பா.ஜ.க. முனைப்பாக உள்ளது.

ஆனால் இந்த முறை பா.ஜ.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைத்துப் போட்டியிடச்செய்யும் முயற்சியில் ஐக்கிய ஜனதாதளம் தலைவரான பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.

பா.ஜ.க. வெற்றி பெறும்

இந்த நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மந்திரியுமான நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2024 மக்களவை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

நாங்கள் நல்ல பணியாற்றி உள்ளோம். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அரசு அமைப்போம். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் எங்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினைகள் பட்டினி, ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம் ஆகும் என்று அவர் கூறினார்.


Next Story