மேற்குவங்காளத்தில் வேலையின்மை அதிகரிப்பு; மம்தா அரசுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்


மேற்குவங்காளத்தில் வேலையின்மை அதிகரிப்பு; மம்தா அரசுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்
x

மாநிலத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக மம்தா அரசுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நேற்று பாஜக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. பாஜக இளைஞரணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக பாஜக இளைஞரணி தலைவர் இந்த்ரணில் கான் கூறுகையில், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், புதிய நிறுவனங்களை கொண்டு வருவதிலும் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது. அரசு பணியில் ஆட்களை தேர்வு செய்யும்போது ஊழல், உறவினர்களுக்கு பனி வழங்கும் சம்பவங்கள் அரங்கேறுகிறது' என்றார்.


Next Story