ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள்


ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள்
x

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்டுள்ளன.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் மீது நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சத்தீஷ்காரில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு வினாத்தாள்கள் ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்டுள்ளன. சுக்மா நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் சுக்மா மாவட்டத்தின் ஜகர்குண்டா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டன.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் காரணமாக கடந்த ஆண்டும் இதேபோல் ஹெலிகாப்டர் மூலமாக வினாத்தாள்கள் கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story