திரிபுராவில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா செடிகளை அழித்த எல்லை பாதுகாப்புப் படையினர்

Image Courtesy : ANI
எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தி கஞ்சா செடிகளை அழித்தனர்.
அகர்தலா,
திரிபுரா மாநிலம் சேபாஹிஜலா மாவட்டம் ராஹிம்பூர் பகுதியில் அமைந்துள்ளது மாணிக்யாநகர் கிராமம். இங்குள்ள காட்டுப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு, சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தி, சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகளை அழித்துள்ளனர். திரிபுரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் இதுவரை 4,02,400 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டு, 300 ஏக்கர் காடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






