விவசாயிகளின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்க முடியாது: ராஜ்நாத் சிங்


விவசாயிகளின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்க முடியாது: ராஜ்நாத் சிங்
x

விவசாயிகளுடன் தோளோடு தோளாக மோடி அரசு நிற்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,கூறினார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள அரசு அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய அவர், " நான் ஒரு விவசாயின் மகன். விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் மண்ணிலிருந்து தங்கத்தை விளைவிக்க முடியும். பா.ஜ.க அரசு விவசாயிகளுடன் தோளோடு தோள் நிற்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சி இல்லாமல், நாட்டின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்க முடியாது.

அமெரிக்காவில் ஒரு மூட்டை யூரியா உரம் ரூ 3,000க்கு விற்பனையாகிறது. இந்தியாவில்தான் விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா உரம் ரூ 300க்கு வழங்கப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போரால் விலைவாசி உயர்வு ஏற்பட்டது, ஆனால் பிரதமர் மோடி அரசு விலை உயர்வை அனுமதிக்கவில்லை.

முந்தைய பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தை அழித்துவிட்டது.

விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ.க அரசு மக்களின் ஆதரவுடன் மாநிலத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.


Next Story