2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை 21-ந்தேதிக்கு தள்ளிவைப்பு


2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை 21-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
x

அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின், 2ஜி வழக்கு கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டி வாதங்களை நிறைவு செய்தார்.

புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத் துறை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு அனுமதி மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின், 2ஜி வழக்கு கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டி வாதங்களை நிறைவு செய்தார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


Next Story