'அவதூறு வழக்கில் மத்திய அரசு ராகுல் காந்தியை குறிவைக்கிறது' - சஞ்சய் ராவத்


அவதூறு வழக்கில் மத்திய அரசு ராகுல் காந்தியை குறிவைக்கிறது  - சஞ்சய் ராவத்
x

மேல்முறையீட்டில் ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மும்பை,

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இதை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத் இது குறித்து கூறுகையில், "மேல்முறையீட்டில் ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் என்றும், அவரது மனு விசாரிக்கப்பட்டு, எம்.பி. தகுதி நீக்கம் ரத்து செய்யப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்த வழக்கில் மத்திய அரசு அவரை குறிவைக்க முயல்கிறது" என்று தெரிவித்தார்.


Next Story