பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி வரம்பில் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்? - நிர்மலா சீதாராமன் பதில்


பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி வரம்பில் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்?  - நிர்மலா சீதாராமன் பதில்
x
தினத்தந்தி 10 Nov 2023 11:43 PM IST (Updated: 11 Nov 2023 2:09 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் "இரட்டை வேடம்" குறித்து ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

இந்தூர்,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பிரதேசம் இந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவதால் மக்களுக்குப் பலன் கிடைக்கும். அதனால் அதற்கு பா.ஜனதாவும், மத்திய அரசும் ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக இருந்து வருகின்றன. ஆனால் தடுப்பது யார்?. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு பிரியங்கா ஆதரவாக இருந்தால், ஜி.எஸ்.டி. கவுன்சிலில் காங்கிரசின் ஒவ்வொரு மாநில அரசும் ஒப்புக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்பில் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் தான்.காங்கிரசின் "இரட்டை வேடம்" குறித்து ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

உலகில் எப்போது போர் நடந்தாலும் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாங்கள் ஏற்கனவே நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என கூறினார்.


Next Story