ஆந்திர முதல்-மந்திரியாக தலைமை செயலகத்தில் சந்திரபாபு நாயுடு பொறுப்பு ஏற்றார்

Image Courtesy : @JaiTDP
ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் வேத மந்திரங்கள் முழங்க முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 4-வது முறை ஆந்திராவின் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் தலைமை செயலகத்திற்கு இன்று சந்திரபாபு நாயுடு வருகை தந்தார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக் கொண்டார்.
தலைமை செயலகத்திற்கு வருவதற்கு முன்பு திருப்பதி மற்றும் விஜயவாடா துர்கா ஆகிய கோவில்களில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தலைமை செயலகத்திற்கு வரும் வழியெங்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் தலைமை செயலகத்திற்கு வருகை தந்த சந்திரபாபு நாயுடுவிற்கு தலைமை செயலாளர் நீரப் குமார் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.






