மும்பையில் 8 ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்கள் மாற்றம் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்


மும்பையில் 8 ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்கள் மாற்றம் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்
x

புறநகர் ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்களை மாற்றுவதற்கு மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில், மும்பையில் உள்ள 8 புறநகர் ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்களை மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கர்ரே ரோடு ரெயில் நிலையம் 'லால்பாக்' என்றும், சாண்ட்ஹர்ஸ்ட் ரோடு ரெயில் நிலையம் 'டோங்ரி' என்றும், மரைன் லைன்ஸ் ரெயில் நிலையம் 'மும்பாதேவி' என்றும், சர்னி ரோடு ரெயில் நிலையம் 'கிர்கான்' என்றும், காட்டன் கிரீன் ரெயில் நிலையம் 'கலாசவுகி' என்றும், டாக்யார்ட் ரோடு ரெயில் நிலையம் 'மஸ்கான்' என்றும், கிங்ஸ் சர்க்கிள் ரெயில் நிலையம் 'தீர்த்தங்கர் பார்ஷ்வநாத்' என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதில் சாண்ட்ஹர்ஸ்ட் ரோடு ரெயில் நிலையம் சென்ட்ரல் மற்றும் ஹார்பர் ஆகிய இரண்டு வழித்தடங்களுக்கும் பயன்படுத்தப்படுவதால், அது இரண்டு நிலையங்களாக கருதப்படுகிறது. பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரைக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைத்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரெயில்வே அமைச்சகத்திற்கு அதன் முன்மொழிவு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story