தமிழ்நாட்டின் பாரம்பரிய 9 வகை தானியங்களை பிரதமர் மோடிக்கு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!


தமிழ்நாட்டின் பாரம்பரிய 9 வகை தானியங்களை பிரதமர் மோடிக்கு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
x

டெல்லியில் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். மாலை 4 மணி அளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். நிறைவேற்றப்படாத பல தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பாரம்பரிய 9 தானிய வகைகளை நினைவுப் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் தானியங்கள் என்ற பெயரில் மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்காரி, சீரக சம்பா, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு உள்ளிட்ட 9 வகையான தானியங்களை நினைவு பரிசாக அளித்தார்.


Next Story