சித்திரை ஆட்டத் திருநாள்: இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு


சித்திரை ஆட்டத் திருநாள்: இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
x
தினத்தந்தி 10 Nov 2023 2:20 AM GMT (Updated: 10 Nov 2023 6:12 AM GMT)

சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

கோழிக்கோடு,

மறைந்த திருவிதாங்கூா் மன்னா் சித்திரை திருநாள் பலராம வா்மா சபரிமலை கோவிலுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளாா். குறிப்பாக, மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கி இவா் காணிக்கையாக வழங்கியது. ஆண்டு தோறும் இவரின் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்று ஐயப்பனுக்கு செய்யப்படும் விசேஷ பூஜை சித்திரை ஆட்டத் திருநாள்.

இவ்வாண்டு இந்தத் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து நாளை 11-ஆம் தேதி அபிஷேகம் முடிந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். அதன் பிறகு இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதனை தொடர்ந்து மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்க உள்ள நிலையில் 41 நாட்கள் மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.


Next Story