ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய கூடும்; மீனவர்களுக்கு எச்சரிக்கை


ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய கூடும்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
x

அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த நிலையாக இன்று தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

விசாகப்பட்டினம்,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின், விசாகப்பட்டினம் சூறாவளி எச்சரிக்கை மையத்தின் எம்.டி. சுனந்தா கூறும்போது, தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் நேற்று (14-ந்தேதி) ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் காற்றழுத்த நிலையாக இன்று (15-ந்தேதி) தீவிரமடைய கூடும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திர பிரதேச கடலோர பகுதியில் நாளை (16-ந்தேதி) ஆழ்ந்த காற்றழுத்த நிலையாக அது, தீவிரமடைய கூடும். அதன்பின்னர், வடக்கு-வடகிழக்கு நோக்கி சென்று வருகிற 17-ந்தேதி ஒடிசா கடலோர பகுதியை சென்றடையும்.

இதனால், ஒடிசா கடலோரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இதனால், அடுத்த அறிவிப்பு வரும் வரை, இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரையிலான நாட்களில், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story