சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மாற்ற கொலீஜியம் பரிந்துரை


சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மாற்ற கொலீஜியம் பரிந்துரை
x

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

சென்னை,

மேகாலயா, ஒடிசா, உத்தரகாண்ட் ஐகோர்ட்டுகளுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்ற கொலீஜியம் குழு கூட்டத்தில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

அதேபோல் பாட்னா ஐகோர்ட்டு நீதிபதி சக்ரதாரி சரண் சிங்கை ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப் ஐகோர்ட்டு நீதிபதி ரித்து பஹ்ரியை உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


Next Story
  • chat