நகரங்களில் சொந்த வீடு வாங்க வங்கிக்கடன் வட்டியில் சலுகை அளிக்கும் திட்டம் இம்மாதம் அமல்


நகரங்களில் சொந்த வீடு வாங்க வங்கிக்கடன் வட்டியில் சலுகை அளிக்கும் திட்டம் இம்மாதம் அமல்
x

நகரங்களில் சொந்த வீடு வாங்க விரும்பும் நடுத்தர வகுப்பினருக்கு வங்கிக்கடன் வட்டியில் சலுகை அளிக்கும் திட்டம் இம்மாதம் அமல்படுத்தப்படுகிறது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி உரையாற்றியபோது, புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். நகரங்களில் வாடகை வீடுகள் மற்றும் அனுமதியற்ற குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர வகுப்பினர், நகரங்களில் சொந்த வீடு வாங்குவதற்காக வங்கிக்கடன் வட்டியில் நிவாரணம் அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த புதிய திட்டம், இம்மாதம் அமல்படுத்தப்படும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதுபற்றி அத்துறையின் மந்திரி ஹர்தீப்சிங் பூரியும், துறையின் செயலாளர் மனோஜ் ஜோஷியும் நிருபர்களிடம் கூறியதாவது:-

"நகரங்களில் நடுத்தர வகுப்பினர் சொந்த வீடு வாங்க வங்கிக்கடன் வட்டியில் நிவாரணம் அளிக்கும் திட்டம், செப்டம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. அதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன." இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story