ஜெய்ப்பூரில் 5-ந் தேதி டிஜிபிக்கள் மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்கிறார்


ஜெய்ப்பூரில் 5-ந் தேதி டிஜிபிக்கள் மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்கிறார்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 3 Jan 2024 1:05 PM GMT (Updated: 3 Jan 2024 1:09 PM GMT)

இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளன.

புதுடெல்லி,

டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு வருகிற 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளுடன் உரையாட உள்ளார். மேலும் இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளன. சமீபத்தில் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், பயங்கரவாதிகள் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையேயான போலீஸ் ஒருங்கிணைப்பு மற்றும் பொதுத் தேர்தலின் போது கையாளப்பட வேண்டியவைகள் உள்ளிட்டவை குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் டிஜிபிக்கள், ஐஜிக்கள் உள்ளிட்ட சுமார் 250 அதிகாரிகள் நேரில் கலந்து கொள்கின்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் கிரைம் குற்றங்கள், காலிஸ்தானி ஆதரவு குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.


Next Story